செய்திகள்

பேட்மிண்டன் உலக தர வரிசையில் பிவி சிந்து 2-வது இடத்திற்கு முன்னேற்றம்

Published On 2017-09-22 14:13 GMT   |   Update On 2017-09-22 14:13 GMT
கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரை வென்றதன் மூலம் உலக பேட்மிண்டன் தரவரிசையில் பிவி சிந்து 2-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி பதக்கம் வென்ற இவர், கடந்த வாரம் நடைபெற்ற கொரிய ஓபனில் முதன்முறையாக தங்கம் வென்று அசத்தினார். கொரிய ஓபனில் தங்கம் வென்றதன் காரணமாக உலக பேட்மிண்டன் தர வரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 2-வது இடத்தை பிடித்திருந்த சிந்து, தற்போது மீண்டும் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சாய்னா நேவால் 12-வது இடத்தில் உள்ளார். சீன தைபே வீராங்கனை தை சு யிங் முதல் இடத்தில் நீடிக்கிறார். கரோலினா மரின் ஐந்தாவது இடத்தையும், ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாரா 8-வது இடத்தையும் பிடித்துள்ளார்.



ஆண்களுக்கான தர வரிசையில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 8-வது இடத்திலும், சாய் பிரணீத் 17-வது இடத்திலும், பிரனாய் 19-வது இடத்திலும் உள்ளனர்.

தற்போது நடைபெற்ற வரும் ஜப்பான் ஓபனில் பிவி சிந்து, சாய்னா 2-வது சுற்றில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர்.
Tags:    

Similar News