செய்திகள்

இலங்கை வீரர்கள் அறையில் இனிப்பு பிஸ்கட்டிற்கு தடை

Published On 2017-08-20 14:18 GMT   |   Update On 2017-08-20 14:18 GMT
இந்தியாவிற்கு எதிரான தொடரில் வீரர்களின் உடற்தகுதியை கருத்தில் கொண்டு இலங்கை வீரர்கள் அறையில் இனிப்பு பிஸ்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. ஒவ்வொரு அணிகளிலும் 14 வீரர்களுக்கு மேல் இடம்பிடித்திருப்பார்கள். இவர்களுக்கென வீரர்கள் அறை (dressing room) ஒதுக்கப்பட்டிருக்கும். இந்த அறையில் இருந்து விளையாட்டை பார்த்து ரசிப்பார்கள். இவர்களுடன் அணி அதிகாரிகளும் இடம்பிடித்திருப்பார்கள்.

இவர்களுக்கு அடிக்கடி டீ, காபி, கூல்ரிங்ஸ் வழங்கப்படும். டீ, காபி உடன் பிஸ்கட் சேர்த்து வழங்கப்படும். பலவகையான பிஸ்கட்டில் இனிப்பு பிஸ்கட்டும் அடங்கும்.



இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இதற்கு அந்த அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களில் உடற்தகுதியில் ஒரு காரணம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி வெளிப்படையாக விமர்சித்தார். இதனால் மந்திரிக்கும், மலிங்காவிற்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது.

தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களின் உடற்தகுதி மீது அதிக அக்கறை எடுத்து வருகிறது. இதற்காக இலங்கை வீரர்கள் அறையில் இனிப்பு பிஸ்கட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இனிப்பு பிஸ்கட்டில் புரோட்டீன் சத்து அதிகம் இருப்பதால் இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News