செய்திகள்

இலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்க மாட்டேன்: ரணதுங்கா

Published On 2017-08-03 14:12 GMT   |   Update On 2017-08-03 14:12 GMT
இலங்கை அணியின் நிர்வாகம் மற்றும் மானேஜ்மென்ட் மீது வெறுப்படைந்து, இலங்கை அணிகள் விளையாடும் போட்டிகளை பார்க்கமாட்டேன் என்று ரணதுங்கா கூறியுள்ளார்.
இலங்கை அணியின் சிறந்த கேப்டனாக விளங்கியவர் ரணதுங்கா. இவர் தலைமையிலான இலங்கை அணி முதன்முறையாக 1996-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றது.

ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணியில் சனத் ஜெயசூர்யா, அரவிந்த் டி சில்வா, கலுவிதர்னா, சமிந்த வாஸ், ரோசன் மகானாமா, தர்மசேனா, ஜெயவர்தனே, சங்ககரா, அட்டப்பட்டு, முரளீதரன் போன்ற ஜாம்பவான்கள் இருந்தனர். இவர்கள் இலங்கை அணி சர்வதேச அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழந்து வந்தது.

ஆனால் தற்போது இலங்கை அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்தது. தற்போது இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டியில் படுதோல்வியடைந்தது. கொழும்பில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட்டில் இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் நல்ல நிலையில் உள்ளது.



இலங்கை அணியின் நிர்வாகம் மற்றும் மேனேஜ்மென்ட் மீது வெறுப்படைந்த ரணுதுங்கா, இனிமேல் இலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

அதேவேளையில் நாளை நடைபெற இருக்கும் இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டியை பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.

2011-ம் ஆண்டு இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஏதோ நடைபெற்றது. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ரணதுங்கா வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News