செய்திகள்

ஐ.பி.எல்.: குஜராத் லயன்ஸ் அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ்

Published On 2017-04-27 16:24 GMT   |   Update On 2017-04-27 16:24 GMT
பெங்களூருவில் நடைபெற்று வரும் போட்டியில் குஜராத் அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதும் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கெய்ல், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்கம் முதலே இருவரும் திணறினார்கள். அணியின் ஸ்கோர் 22 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி (10), கெய்ல் (8), டிராவிஸ் ஹெட் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு டி வில்லியர்ஸ் உடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இவர் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டி வில்லியர்ஸ் 5 ரன்னில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். மந்தீப் சிங் 8 ரன்னில் வெளியேற, நெஹி அதிரடியாக விளையாடி 19 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.



10-வது வீரராக களம் இறங்கிய 15 ரன்கள் எடுக்க ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவரில் 134 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. குஜராத் அணி சார்பில் டை 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் லயன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Similar News