செய்திகள்

முதல் ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது வங்காள தேசம்

Published On 2017-03-26 10:19 GMT   |   Update On 2017-03-26 10:19 GMT
தம்புல்லாவில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தமீம் இக்பால் சதத்தால் இலங்கையை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காள தேசம்.
இலங்கை - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய வங்காள தேசம் தமீம் இக்பால் (127), சபீர் ரஹ்மான் (54), சாஹிப் அல் ஹசன் (72) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது.

பின்னர் 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்ததால் 45.1 ஓவரில் 234 ரன்கள் எடுத்து ஆல்அவுட் அனது. இதனால் வங்காள தேசம் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக சண்டிமால் 59 ரன்னும், பெரேரா 55 ரன்னும் எடுத்தனர். வங்காள தேச அணி சார்பில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் 3 விக்கெட்டும், மோர்தசகா, மெஹதி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். சதம் அடித்த தமீம் இக்பால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் வங்காள தேசம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி 28-ந்தேதி நடக்கிறது.

Similar News