செய்திகள்

இந்தியா, வங்காள தேசம், இலங்கை இடையே அடுத்த வருடம் முத்தரப்பு கிரிக்கெட்

Published On 2017-03-17 13:51 GMT   |   Update On 2017-03-17 13:51 GMT
இலங்கையில் அடுத்த வருடம் இந்தியா, இலங்கை, வங்காள தேச அணிகள் மோதும் ‘நிதாஹாஸ் டிராபி’ என்ற பெயரில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற 70-ம் ஆண்டு சுதந்திர தினத்தை, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அந்நாடு கொண்டாட இருக்கிறது. இந்த ஞாபகப்படுத்தும் வகையில் இந்தியா, இலங்கை, வங்காள தேசம் அணிகளுக்கு இடையே முத்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. இந்த தொடருக்கு ‘நிதாஹாஸ் டிராபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.



இந்த போட்டியை மார்ச் 15-ந்தேதி முதல் மார்ச் 30-ந்தேதி வரை நடத்த இருக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டு போட்டிகளாக கொண்ட இறுதிப் போட்டி இருக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட இருக்கிறது.



அதே சமயத்தில் இலங்கை அணி அடுத்த வருடம் இந்தியா வந்து ஐந்து ஒருநாள், ஒரு டி20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முத்தரப்பு தொடருக்காக இந்த தொடரில் இருந்து சில போட்டிகள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.




முத்தரப்பு தொடர் ஒருநாள் கிரிக்கெட் தொடரா? அல்லது டி20 தொடரா? என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.

Similar News