செய்திகள்

தென்னாப்பிரிக்கா தொடரை வெல்லுமா?: நியூசிலாந்துடன் நாளை மோதல்

Published On 2017-02-28 08:07 GMT   |   Update On 2017-02-28 08:07 GMT
தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து மோதும் 4-வது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நாளை நடக்கிறது. இதில் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் தென்னாப்பிரிக்கா உள்ளது.
ஹோமில்டன்:

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

5 ஒரு நாள் தொடரில் முதல் மற்றும் 3-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும் 2-வது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன.



தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து மோதும் 4-வது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நாளை நடக்கிறது. இதில் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் தென்னாப்பிரிக்கா உள்ளது. நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 8 ஒரு நாள் தொடரை கைப்பற்றி உள்ளது. அதை தக்க வைத்துக்கொள்ள நியூசிலாந்து போராடும்.

Similar News