செய்திகள்

தொடர்ந்து கேட்ச் மிஸ்சிங்: கவலையளிக்கும் வகையில் இந்திய பீல்டிங்

Published On 2017-02-26 11:21 GMT   |   Update On 2017-02-26 11:21 GMT
தொடர்ந்து கேட்ச் மிஸ்சிங் செய்து வரும் இந்திய அணியின் பீல்டிங் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதை திருத்திக் கொள்வது இந்திய அணிக்கு முக்கியமானது.
புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 155 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 285 ரன்கள் குவித்தது. இதற்கு அந்த அணியின் கேப்டன் ஸ்மித் அடித்த 109 ரன்கள்தான் முக்கிய காரணமாக இருந்தது.

அவருக்கு இந்திய வீரர்கள் ஐந்து கேட்ச்களை கோட்டை விட்டனர். நடுவர் ஒரு எல்.பி.டபிள்யூ அவுட்டும் கொடுக்கவில்லை. இதனால் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 285 ரன்கள் குவித்துவிட்டது. தோல்விக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘ஒரு பேட்ஸ்மேனுக்கு ஐந்து கேட்ச் வாய்பபை நழுவவிட்டால் அதன்பின் நம்மால் வெற்றி பெற முடியாது’’ என்று கூறியிருந்தார்.

இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஒரே டெஸ்டில் இந்திய வீரர்கள் ஸ்லிப்பில் மூன்று கேட்ச்களை கோட்டை விட்டனர். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதால் அந்த குறை தென்படவில்லை.



ஆனால், இதுபோன்ற கடினமாக ஆடுகளத்தில் விளையாடும்போது ஒவ்வொரு கேட்சும் முக்கியமானது. மிகவும் டர்ன் ஆகும் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன் அருகில் பீல்டிங் செய்யும் வீரர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். மாற்று வீரராக களம் இறங்கிய அபிநவ் முகுந்த் இரண்டு முறை கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். ரென்ஷா கேட்சை முரளி விஜய் பிடிக்க தவறினார்.

ஆனால், ஆஸ்திரேலியா வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் சிறப்பாக கேட்ச் பிடித்து ஆஸ்திரேலியாவிற்கு பக்கபலனமாக இருந்தார். அடுத்த மூன்று போட்டிகளில் இந்திய வீரர்கள் கவனமாக பீல்டிங் செய்ய வேண்டியது அவசியம்.

Similar News