செய்திகள்

பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 6-வது வெற்றி

Published On 2017-02-06 04:10 GMT   |   Update On 2017-02-06 04:10 GMT
10 அணிகள் பங்கேற்றுள்ள பார்வையற்றோர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் இந்தியா ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது.
ஆமதாபாத் :

10 அணிகள் பங்கேற்றுள்ள பார்வையற்றோர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஒரு லீக்கில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்தித்தது. முதலில் பேட் செய்த இந்தியா ரன்வேட்டை நடத்தியது. தொடக்க ஆட்டக்காரர் சுனில் 163 ரன்கள் (72 பந்து, 29 பவுண்டரி) திரட்டி கடைசி வரை களத்தில் இருந்தார்.

20 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 272 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் எக்ஸ்டிரா வகையில் கிடைத்த 40 ரன்களே அதிகபட்சமாகும்.

இதன் மூலம் இந்தியா 128 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. 7-வது லீக்கில் ஆடிய இந்தியாவுக்கு இது 6-வது வெற்றியாகும். 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் இந்தியா ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது.

Similar News