செய்திகள்

ரஞ்சி டிராபி: மும்பை அணியில் 17 வயது வீரர் இடம் பிடிப்பு

Published On 2016-12-29 13:37 GMT   |   Update On 2016-12-29 13:37 GMT
ரஞ்சி டிராபி அரையிறுதிக்கான மும்பை அணியில் 17 வயதே ஆன ப்ரித்வி ஷா என்ற இளைஞன் இடம்பிடித்துள்ளார்.
ரஞ்சி டிராபியின் அரையிறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. ஒரு அரையிறுதியில் தமிழ்நாடு - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தமிழ்நாடு அணியை எதிர்த்து விளையாடும் மும்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 17 வயதே ஆன ப்ரித்வி ஷாவிற்கு இடம் கிடைத்துள்ளது.

மும்பை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஆதித்யா டாரே (கேப்டன்). 2. பிரபுல் வகாலே, 3. ஸ்ரோயஸ் அய்யர், 4. சூர்யகுமார் யாதவ், 5. சித்தேஷ் லாட், 6. அபிஷேக் நாயர், 7. ஷர்துல் தாகூர், 8. பல்விந்தர் சிங் சந்து, 9. துஷார் தேஷ்பாண்டே, 10. ராய்ஸ்டன் தியாஸ், 11. சபியன் ஷேய்க், 12. விஜய் கோஹில், 13. அக்சய் கிராப், 14. ஏக்நாத் கெர்கர், 15. ப்ரித்வி ஷா.

இலங்கையில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியில் ப்ரித்வி ஷா இடம்பிடித்திருந்தார். அவர் ஐந்து போட்டிகளில் 191 ரன்கள் சேர்த்தார். அதிகபட்சமாக 89 ரன்கள் அடித்தார். 2013-ம் ஆண்டு உள்ளூர் போட்டியில் 330 பந்தில் 546 ரன்கள் அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News