செய்திகள்

பல்கலைக்கழக கூடைப்பந்து இன்று தொடக்கம்

Published On 2016-12-26 03:33 GMT   |   Update On 2016-12-26 03:33 GMT
தென்மண்டல பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி (ஆண்கள்) சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) முதல் 31-ந்தேதி வரை நடக்கிறது.
தென்மண்டல பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி (ஆண்கள்) சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) முதல் 31-ந்தேதி வரை நடக்கிறது.

சென்னை பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் துறை சார்பில் நடக்கும் இந்த போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 80 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் அடிப்படையில் நடைபெறும்.

Similar News