செய்திகள்

ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்: இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வி

Published On 2016-11-30 04:17 GMT   |   Update On 2016-11-30 04:17 GMT
பாங்காக்கில் நடந்து வரும் ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
பாங்காங் :

ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து ஆகிய 6 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டியில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது. பின்னர் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடர்ந்து பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.

2 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி சந்தித்த முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News