செய்திகள்

சென்னை மாவட்ட ஆக்கி அணி தேர்வு 28-ந் தேதி நடக்கிறது

Published On 2016-10-26 02:08 GMT   |   Update On 2016-10-26 02:09 GMT
அடுத்த மாதம் நடக்கிவிருக்கும் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மண்டல ஆக்கி போட்டிக்கான சென்னை மாவட்ட ஆக்கி அணி தேர்வு 28-ந் தேதி நடக்கிறது.
சென்னை :

14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மண்டல ஆக்கி போட்டி கிருஷ்ணகிரியில் அடுத்த மாதம் (நவம்பர்) 5 மற்றும் 6-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தேர்வு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது.

1-1-2003-க்கு பிறகு பிறந்தவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள். இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்-வீராங்கனைகள் தகுந்த வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆக்கி சங்க செயலாளர் எம்.எஸ்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Similar News