செய்திகள்

சீன ஒபனில் களமிறங்கும் சாய்னா நேவால்

Published On 2016-10-21 06:30 GMT   |   Update On 2016-10-21 06:30 GMT
முழங்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்த சாய்னா நேவால் குணமடைந்தார். வருகிற நவம்பர் 12-ந் தேதி தொடங்கும் சீன பேட்மின்டன் ஓபனில் விளையாடுகிறார்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். காயத்துடன் ரியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய அவர் சோபிக்கவில்லை.

முழங்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்த சாய்னா நேவால் குணமடைந்தார். வருகிற நவம்பர் 12-ந் தேதி தொடங்கும் சீன பேட்மின்டன் ஓபனில் விளையாடுகிறார். இதற்காக அவர் பயிற்சியை தொடங்குகிறார்.

கடந்த ஆண்டு சீன ஓபனில் சாய்னா நேவால் 2-வது இடத்தை பிடித்தார். 2014-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை பிடித்து இருந்தார்.

Similar News