செய்திகள்

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன்: சிந்து தோல்வி

Published On 2016-10-21 02:23 GMT   |   Update On 2016-10-21 02:22 GMT
டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
ஒடென்சி :

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது. இதில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய மங்கை பி.வி.சிந்து நேற்று 2-வது சுற்றில் சயகா சாட்டோவுடன் (ஜப்பான்) மோதினார்.

65 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் சிந்து 13-21, 23-21, 18-21 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.

Similar News