செய்திகள்

U-18 ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

Published On 2016-09-30 11:47 GMT   |   Update On 2016-09-30 11:47 GMT
18 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் 18 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது.

அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவும், சீன தைபே அணியை வீழ்த்தி போட்டியை நடத்தும் வங்காள தேசமும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவும், வங்காள தேசமும் பலப்பரீட்சை நடத்தின. இந்திய வீரர்களின் அபார ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து போட்டியை நடத்தும் வங்காள தேசம் விளையாடியது. இதனால் இரு அணிகளும் கோலுக்கு கோல் பதிலடி கொடுத்தன.

இறுதியில் இந்தியா 5-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Similar News