செய்திகள்

கான்பூர் டெஸ்ட்: 8 ரன்களுக்குள் கடைசி 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்த நியூசிலாந்து

Published On 2016-09-24 08:54 GMT   |   Update On 2016-09-24 08:54 GMT
கான்பூர் டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 ரன்கள் எடுப்பதற்குள் கடைசி 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 262 ரன்னில் சுருண்டது. அந்த அணி ஒரு கட்டத்தில் நல்ல வலுவான நிலையில் இருந்தது. 219 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்திருந்தது அந்த அணி, 255 ரன்களுக்கு 6-வது விக்கெட்டை இழந்தது.

அதன்பின் மேலும் 8 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் கடைசி 8 ரன்களுக்குள் கடைசி 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. இதனால் இந்தியா 56 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஜடேஜா ஐந்து விக்கெட்டுக்களும், அஸ்வின் 4 விக்கெட்டுக்களும் வீழ்த்தி அசத்தினார்கள். இருவரும் இணைந்து 96 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

Similar News