செய்திகள்

துணைக் கண்டத்திற்கு வெளியே முதல் முறையாக 5 விக்கெட்டுக்கு அதிகமாக வீழ்த்திய அஸ்வின்

Published On 2016-07-25 11:29 GMT   |   Update On 2016-07-25 11:29 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தியன் மூலம் வெளிநாட்டு மண்ணில் முதல்முறையாக அஸ்வின் 5 விக்கெட்டுக்களுக்கும் அதிகமாக வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் ரவிசந்திரன் அஸ்வின். 29 வயதாகும் இவர், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார். இதில் 17 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெல்லியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இவர் இந்திய மண்ணில் அபாரமாக பந்து வீசி அசத்தினார். துணைக்கண்டமான இந்தியா, இலங்கை, வங்காள சேதம் மண்ணில் அஸ்வின் பந்தை சந்திப்பது மிகக்கடினம்.

ஆனால், துணைக் கண்டத்தை தாண்டி அஸ்வின் சிறப்பாக செயல்பட்டது கிடையாது. இதுவரை ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியது கிடையாது. ஆனால் நேற்றுடன் முடிவடைந்த முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 83 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தி இந்த குறையை போக்கியுள்ளார்.

இந்திய அணி 2011-2012-ல் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது மெல்போர்ன் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 1 விக்கெட்டும் வீழ்த்தினார். அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்டில் முதல் இன்னிங்சில் 194 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 72 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடைபெற்ற போட்டியில் 72 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

மீண்டும் இந்திய அணி 2014-2015-ல் ஆஸ்திரேலியா சென்றிருந்தது. அப்போது பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் 128 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்டின் முதல் இன்னிங்சில் 134 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினார். சிட்னியில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் 142 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 105 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

சிட்னியில் 105 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுதான் இதுவரை அதிக விக்கெட்டாக இருந்தது. நேற்று முடிவடைந்த ஆன்டிகுவா டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் அள்ளினார். இதன்மூலம் வெளிநாட்டு மண்ணில் அஸ்வினால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வங்காள சேதத்திற்கு எதிராக 2015-ல் பதுல்லாவில் நடைபெற்ற போட்டியில் 87 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

2013-ம் ஆண்டு இந்திய அணி, தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற போட்டியில் அஸ்வின் விக்கெட் வீழ்த்தவில்லை. இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட அடுத்த டெஸ்டில் அஸ்வினுக்கு இடம் கிடைக்காமல் போனது. இந்த காலக்கட்டம் அஸ்வினுக்கு பெரிய சோதனைக்காலமாக அமைந்தது. அதை திறமையாக எதிர்கொண்டு மீண்டு வந்து அசத்தி வருகிறார்.

Similar News