செய்திகள்

விராட் கோலியின் ரன் குவிப்பை தடுக்க வெ.இ. அணிக்கு நகைச்சுவையான ஆலோசனையை வழங்கிய ஹர்பஜன்

Published On 2016-07-24 11:19 GMT   |   Update On 2016-07-24 11:19 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். அவரை தடுக்க முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹர்பஜன் சிங் நகைச்சுவான ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணி இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு கேப்டன் விராட் கோலி முக்கிய காரணமாக இருந்தார். அவர் 283 பந்துகளில் 24 பவுணடரிகளுடன் 200 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

விராட் கோலி இந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டி20 உலகக்கோப்பை மற்றும் ஐ.பி.எல். தொடரில் நம்பமுடியாத அளவிற்கான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், டெஸ்ட் தொடரில் பெரிய இன்னிங்ஸ் விளையாடியது இல்லை. இந்நிலையில் தற்போது முதன்முறையாக இரட்டை சதம் அடித்துள்ளார்.

விராட் கோலியின் ஆட்டத்திற்கு தடைபோட முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விளையாட்டாக ஒரு ஆலோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘விராட் கோலியின் ஆட்டத்தை தடுக்க ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அது அவருடைய கிட்பேக்கை மறைத்து வைத்துவிட வேண்டும் என்பதுதான். Keep going SHERA.good luck @BCCI’’ என்று நகைச்சுவையாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அபார பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 23 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இருவரும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 

Similar News