இந்தியா
null

பா.ஜனதா மற்றவர்களை அழித்துவிட்டு வளர விரும்புகிறது: உத்தவ் தாக்கரே காட்டம்

Published On 2023-10-15 21:30 GMT   |   Update On 2023-10-15 21:31 GMT
  • உங்களிடம் எதுவும் இல்லாத போதும், ஒருவர் உங்களுடன் கைகோர்க்கிறார் என்றால் அதுதான் உண்மையான நட்பு.
  • நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க விரும்பும் தேசியவாதிகள்.

மும்பை:

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் நடந்த கூட்டத்தில் சோசியலிச கட்சிகளை சேர்ந்த 21 தலைவர்கள் மத்தியில் பேசினார்.

அவர் பேசியதாவது:- எனது தந்தை பால்தாக்கரேவும், சோசியலிச கட்சி தலைவர்களும் வேறுபாடுகளை மறந்து ஒன்று பட்ட மராட்டியத்துக்காக போராட ஒருங்கிணைந்தனர். அவர்களின் போராட்டமும் வெற்றி பெற்றது. 1960-ல் மும்பை மராட்டியத்தின் தலைநகரானது. எங்களின் சித்தாந்தம் வேறுபடலாம். ஆனால் நோக்கம் ஒன்று தான். உட்கார்ந்து பேசினால் வேறுபாடுகளை களைய முடியும்.

பா.ஜனதா மற்றவர்களை அழித்துவிட்டு வளர விரும்புகிறது. தற்போது அவர்கள் யாரும் இருக்க கூடாது என நினைக்கிறார்கள். தற்போது என்னிடம் உங்களுக்கு கொடுக்க எதுவுமில்லை. உங்களிடம் எதுவும் இல்லாத போதும், ஒருவர் உங்களுடன் கைகோர்க்கிறார் என்றால் அதுதான் உண்மையான நட்பு.

நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது பா.ஜனதாவால் மலர் தூவ முடியும் போது, நானும் சோசியலிச கட்சிகளுடன் பேச முடியும். அதில் பலர் இஸ்லாமியர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க விரும்பும் தேசியவாதிகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News