இந்தியா (National)
கொரோனா வைரஸ்

புதிதாக 2,124 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு

Published On 2022-05-25 04:26 GMT   |   Update On 2022-05-25 04:26 GMT
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,977 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 2 ஆயிரத்து 714 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

நேற்றைய பாதிப்பு 1,675 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

கேரளாவில் 468, டெல்லியில் 418, மகாராஷ்டிராவில் 338, அரியானாவில் 230, உத்தரபிரதேசத்தில் 124, கர்நாடகாவில் 118 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 42 ஆயிரத்து 192 ஆக உயர்ந்தது.

கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 13 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதவிர நேற்று டெல்லியில் 2, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் தலா ஒருவர் என மேலும் 17 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,507 ஆக உயர்ந்தது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,977 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 2 ஆயிரத்து 714 ஆக உயர்ந்தது.

தற்போது 14,971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 130 அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை 192 கோடியே 67 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 13,27,544 டோஸ்கள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 4,58,924 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 84.79 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News