இந்தியா (National)
புவனேஷ்வர் ஆணையர் வெளியிட்ட அறிக்கை

புவனேஷ்வரில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல இனி தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை

Published On 2022-02-23 14:54 GMT   |   Update On 2022-02-23 14:54 GMT
ஒடிசா மாநில தலைநகர் புவனேஷ்வரில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல கட்டுபாடுகளை தளர்த்தி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.

இந்நிலையில், ஒடிசா மாநில தலைநகர் புவனேஷ்வரில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல கட்டுபாடுகளை தளர்த்தி அறிவித்துள்ளது.

இதுகுறித்து புவனேஷ்வர் நகராட்சி ஆணையர் சஞ்சய் சிங் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

வழிபாட்டு தலங்களுக்குச் செல்ல பக்தர்கள் கொரோனா தொற்று இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ்கள் அல்லது அடையாளச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

இருப்பினும், வழிபாட்டு தலங்களின் அதிகாரிகள் தங்கள் வளாகத்திற்குள் கொரோனா தொற்று தடுப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. போர் பதற்றம்- உக்ரைனில் இருந்து வெளியேறும்படி நேபாள மக்களுக்கு அந்நாட்டு அமைச்சகம் வலியுறுத்தல்
Tags:    

Similar News