இந்தியா
இந்தூர் போக்குவரத்து காவலர் ரஞ்சித் சிங்

எம தர்ம ராஜன் வேடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து காவலர்

Update: 2022-01-23 19:39 GMT
துரதிர்ஷ்டவசமாக,பலர் போக்குவரத்து சிக்னல்களை மதிப்பதில்லை என்று இந்தூரை சேர்ந்த போக்குவரத்து காவலர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தூர்

இந்தியாவில் கடந்த 2020 ஆண்டில் 3.5 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவாகின. 1,33,201 பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர்.   3,35,201 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் போக்குவரத்து காவலரான ரஞ்சித் சிங், பரபரப்பான சாலை சந்திப்புகளில் மறைந்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மூன்வாக் நடனத்தை ஆடி, போக்குவரத்தை சீர் அமைக்கும் பணியை மேற் கொண்டு வருகிறார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் அதில் உள்ள ஆபத்தை உணரும் வகையில் எம தர்ம ராஜன் போன்று வேடமணிந்தும் அவர் பணியில் ஈடுபடுகிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :

துரதிர்ஷ்டவசமாக, பலர் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை மதிப்பதில்லை. காவலர்கள் யாரும் பார்க்கவில்லை என்றால் அதை தாண்ட  வேண்டும் என்ற உத்வேகம் அவர்களுக்கு உள்ளது, ஆனால் அவர்கள் நான் நடிப்பதை பார்த்தவுடன் நிறுத்தப்படுகின்றனர். இதனால் போக்குவரத்து சீராக நிர்வகிக்கப்படுகிறது. நான் பணிக்கு நியமிக்கப்படும் போதெல்லாம் இந்த புதிய நுட்பம் உதவுகிறது. 

இதுபோன்ற முயற்சி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்த உடையில்  ஒருவரிடம் நான் விளக்கினால், குறைந்தது 20 பேர் கவனிக்கிறார்கள். நான் இதை கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு முயற்சித்தேன், மேலும்  தொற்று காலங்களில் கூட நாங்கள் இதைச் செய்தோம். இவ்வாறு அவர் கூறினார். இது போன்ற வேடங்களை போடுவதற்கு தனது துறையிலிருந்து அவர் அங்கீகாரம் பெற்றுள்ளார், இந்த முயற்சிக்காக அவருக்கு பல விருதுகளும் கிடைத்துள்ளன.
Tags:    

Similar News