இந்தியா
முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத்

பிபின் ரவாத் மறைவு: உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு

Published On 2021-12-09 02:56 GMT   |   Update On 2021-12-09 02:56 GMT
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சூலூர் விமானப்படைத்தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளிக்கு நேற்று ராணுவ ஹெலிகாப்டரில் (எம்.ஐ.17 வி 5 MI 17v-5) சென்றபோது, ஹெலிகாப்டர்  திடீரென விபத்துக்குள்ளானது.

ராணுவ ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர்  பயணித்தனர். இதில், 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மறைந்த பிபின் ராவத்தின் உடல் இன்று டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் அவரது மறைவுக்கு இன்று முதல் 11-ம் தேதி வரை 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

மேலும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மாநில செயலாளர் வினோத்குமார் சுமன் சார்பில் அரசு இரங்கல் உத்தரவும் பிறப்பித்துள்ளதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News