செய்திகள்
சாலை மறியல்

அரியானாவில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

Published On 2021-08-28 11:15 GMT   |   Update On 2021-08-28 14:36 GMT
அரியானா மாநில பாஜக தலைவர் ஓ.பி.தங்கார், பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றபோது, வாகன அணிவகுப்பை விவசாயிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சண்டிகர்: 

 மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் 9 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்ததால் விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது.  

மேலும், பாஜக  தலைவர்களுக்கு எதிராகவும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்படுகிறது. 



இந்நிலையில் அரியானா மாநில பாஜக தலைவர் ஓ.பி.தங்கார், பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றபோது, வாகன அணிவகுப்பை  விவசாயிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கார்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் பாஜக  பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கும் செல்ல விவசாயிகள் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தடியடி  நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தடியடியில் விவசாயிகள் சிலர் காயமடைந்தனர்.

காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பல்வேறு நெடுஞ்சாலைகளை மறித்தும், சுங்கச்சாவடிகளிலும் மறியலில்  ஈடுபட்டதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில சாலைகளில் 3 கிமீ வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Tags:    

Similar News