செய்திகள்
வருமான வரி கணக்கு

வருமான வரி கணக்கு செலுத்த செப்டம்பர் 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு

Published On 2021-05-21 01:41 GMT   |   Update On 2021-05-21 01:52 GMT
கொரோனா தாக்கம் காரணமாக வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.
புதுடெல்லி:

2020-2021 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். கம்பெனிகளுக்கு அக்டோபர் 31-ந்தேதி கடைசி நாள். இந்தநிலையில், கொரோனா தாக்கம் காரணமாக வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.

அதன்படி, தனிநபர்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்தற்கான கடைசி தேதி செப்டம்பர் 30-ந்தேதி வரையும், கம்பெனிகள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30-ந்தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோல், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம்-16 அளிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனை அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூன் 30-ந்தேதி வரையும், வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 31-ந்தேதி வரையும், திருத்தப்பட்ட வருமான கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News