செய்திகள்
கோப்புப்படம்

குஜராத்தில் போலீஸ் நிலையத்தில் மது பாட்டில்களை பதுக்கிய போலீசார்

Published On 2021-02-21 00:38 GMT   |   Update On 2021-02-21 00:38 GMT
குஜராத்தில் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்கள் 2 பேர் 120-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை பதுக்கிய சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டு உள்ளது
சூரத்:

குஜராத் மாநிலத்தில் மாநில எல்லைக்குள் மதுபானம் உற்பத்தி, விற்பனை மற்றும் மது அருந்துவதற்கு கடுமையான தடை சட்டம் உள்ளது.

இந்த நிலையில் குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் போலீஸ்காரர்கள் 2 பேர் சென்ற வாகனம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து அந்த போலீஸ்காரர்கள் 2 பேரும் 120-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை வாகனத்தில் எடுத்து சென்றது தெரியவந்தது.‌

இதையடுத்து போலீஸ்காரர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மோடோசா நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் மேலும் பல மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அந்த போலீஸ் நிலையத்தில் சோதனை அங்கிருந்து 70க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீஸ்காரர்கள்

மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News