செய்திகள்
உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி

பயங்கரவாத வன்முறைகள் குறைந்துள்ளது- மத்திய அரசு தகவல்

Published On 2021-02-08 09:44 GMT   |   Update On 2021-02-08 09:44 GMT
2020ம் ஆண்டில் பயங்கரவாத வன்முறைகள், ஊடுருவல் முயற்சிகள் பாதிக்கும் மேல் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மாநிலங்களவையில் இன்று உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி பேசியதாவது:-

எல்லையில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதல்களால் கடந்த 2019ம் ஆண்டு 127 பேர் காயமடைந்தனர். 2020ல் 71 பேர் காயமடைந்துள்ளனர். 2019ல் 216 ஊடுருவல் முயற்சிகளும், 2020ல் 99 முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. 

2019ல் 157 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 2020ல் 221 பேர் கொல்லப்பட்டனர். 2019ல் பயங்கரவாத வன்முறை தொடர்பாக 594 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2020ல் 244 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. 2019ல் 2009 கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், 2020ல் அது மிகவும் குறைந்துள்ளது. 327 சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News