செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் கடந்த 2 நாட்களாக ரூ.3 கோடியை தாண்டிய உண்டியல் வசூல்

Published On 2021-02-02 11:52 GMT   |   Update On 2021-02-02 11:52 GMT
திருப்பதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்திருந்த உண்டியல் வருவாய் தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. ரூ.2 கோடி வசூலாகி வந்த உண்டியல் வருவாய் தற்போது ரூ.3 கோடியை எட்டியுள்ளது.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்திருந்த உண்டியல் வருவாய் தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. ரூ.2 கோடி வசூலாகி வந்த உண்டியல் வருவாய் தற்போது ரூ.3 கோடியை எட்டியுள்ளது.

நேற்று முன்தினம் 48 ஆயிரத்து 337 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 20 ஆயிரத்து 349 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். ரூ. 3 கோடி உண்டியல் வசூலாகியிருந்தது.

நேற்று 43,313 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 21,013 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.02 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தொடர்ந்து 2 நாட்கள் உண்டியல் வசூல் ரூ.3 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News