செய்திகள்
புதிய கல்வித் கொள்கை

2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி - அமித் கரே

Published On 2020-07-29 12:11 GMT   |   Update On 2020-07-29 12:11 GMT
2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த புதிய கல்விக் கொள்ளை உருவாக்கப்படும் என மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு முக்கியம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை, மத்திய கல்வித்துறை அமைச்சகம் என்று மாற்றவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

புதிய கல்வித் கொள்கை மாற்றங்களில் முக்கியம்சங்கள் என்ன?

34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மாநில மொழிகளில் கல்வி கற்பிக்க இணையதளம் மூலம் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் அளிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் எளிதாக கல்வி கற்க புதிய மென்பொருட்கள் மூலம் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

புதிய கல்வித் கொள்கை மூலம் 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும்.

குழந்தைகளுக்கு எளிதான வழிமுறைகள் மூலம் ஆரம்பக் கல்வி கற்பிக்கப்படும்.

ஆறாம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

6ம் வகுப்பு முதல் தொழில்முறைக் கல்விகளின் அடிப்படைகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.

அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தம்.

பொறியியல் போன்ற உயர் படிப்புகளில், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம்.

தற்போது 8-ம் வகுப்பு வரை உள்ள இலவச கட்டாயக் கல்வி திட்டம் 12-ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்.

இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்.

முதல் ஆண்டில்  பழைய மற்றும் புதியக் கல்விக் கொள்கை நடைமுறையில் இருக்கும்.

2ம் ஆண்டில்  புதியக் கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறையில் இருக்கும்.

2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை.

நாட்டின் மொத்த உற்பத்தியில் 6%த்தை கல்வித்துறைக்கு ஒதுக்க நடவடிக்கை.

கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் அமைக்கப்படும்.

இந்திய மொழிகளுக்கான இலக்கியம், அறிவியல்பூர்வ வார்த்தைகளை கண்டறிய கவனம் செலுத்தப்படும்.

15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.

எம்.பில் படிப்புகள் நிறுத்தபடுவதாக புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு

தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்.

புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும்


Tags:    

Similar News