செய்திகள்
மணிஷ் சிசோடியா

இதுவரை 2,41,000 பேர் வெளியேறியுள்ளனர்: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தகவல்

Published On 2020-05-26 12:14 GMT   |   Update On 2020-05-26 12:14 GMT
மே 7-ந்தேதியில் இருந்து தற்போது வரை 196 ரெயில்கள் மூலம் 2,41,000 பேர் சொந்த மாநிலங்கள் திரும்பியுள்ளனர் என்று டெல்லி மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந்தேதி வரை 21 நாட்கள் பொது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் மே 3-ந்தேதி வரை 19 நாட்கள் 2-வது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடிவு செய்தனர்.

நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு ரெயில்கள் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்தது.

டெல்லியில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் சொந்த மாநிலங்கள் திரும்பி கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறுகையில் ‘‘டெல்லியில் யார் ஒருவர் இருந்தாலும், அவர்கள் டெல்லி குடிமகன் அல்லது குடிமகளாக கருதப்படுவார்கள். இருந்த போதிலும் ஏராளமானோர் சொந்த மாநிலம் திரும்ப விரும்புகிறார்கள். கடந்த 7-ந்தேதியில் இருந்து தற்போது வரை 196 ரெயில்கள் மூலம் 2,41,000 பேர் டெல்லியில் இருந்து வெளியேறியுள்ளனர்’’ என்றார்.
Tags:    

Similar News