செய்திகள்
இந்திய ரெயில்வே

167-வது ஆண்டில் அடி எடுத்து வைத்த இந்திய ரெயில்வே

Published On 2020-04-16 20:51 GMT   |   Update On 2020-04-16 20:55 GMT
1853-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்திய பயணிகள் ரெயில் சேவை தனது 167-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் நெடுந்தூர பயணத்திற்கு ரெயில்வே போக்குவரத்து முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. 

நாடு முழுவதும் மக்கள் போக்குவரத்துக்கு பெரும்பாலும் ரெயில் சேவைகளையே நம்பியுள்ளனர். அது மட்டுமல்லாமல் நாட்டின் முன்னேற்றத்திற்கு ரெயில்வேயின் பங்கு அளப்பரியதாக உள்ளது.

இந்நிலையில், இந்திய ரெயில்வே பயணிகள் ரெயில் சேவையில் 167-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 

இந்திய ரெயில்வே தனது முதல் பயணிகள் ரெயில் சேவையை 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி துவங்கியது.

ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட முதல் பயணிகள் ரெயில் சேவை மும்பை முதல் தானே வரை இயக்கப்பட்டது. அன்றிலுருந்து இடைவிடாது சேவையை செய்து வரும் இந்திய ரெயில்வே 166 ஆண்டுகளை நிறைவு செய்து நேற்று 167-வது ஆண்டில் அடிஎடுத்து வைத்துள்ளது.



167-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள இந்திய ரெயில்வே 1974-ம் ஆண்டு ஊதிய உயர்வை வலியுறுத்தி ஊழியர்களின் போராட்டத்தால் முதல் முறையாக மூன்று வாரங்களுக்கு நாடு முழுவதும் பயணிகள் ரெயில் போக்குவரத்து தடைபட்டது.

ஒரு நாளைக்கு சராசரியாக 2 கோடி மக்கள் பயணம் செய்யும் இந்திய ரெயில்வே தற்போது கொரோனா அச்சுருத்தல் காரணமாக மார்ச் 25-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை தனது பயணிகள் ரெயில் சேவைகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News