செய்திகள்
கோப்பு படம்

டெல்லி - தேர்தல் பணியில் இருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்

Published On 2020-02-08 10:48 GMT   |   Update On 2020-02-08 10:48 GMT
டெல்லி சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேர்தல் அதிகாரி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

டெல்லி தேர்தல் பணிகளில் அரசு ஆசிரியர்கள் உள்பட பலர் வாக்குச்சாவடி கண்காணிப்பு அதிகாரிகளாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாபர்பூர் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த உதம் சிங் என்ற ஆசிரியர் இன்று காலை வாக்குச்சாவடியில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தார். 

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உதம் சிங்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். 

இதற்கிடையில், டெல்லி சட்டசபை தேர்தலில் மூன்றுமணி நிலவரப்படி 30.18 சதவிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News