செய்திகள்
துணைக்கோட்ட அதிகாரி காசிராம் படோல்

கோவிலில் திருமணம் செய்ய தலித் மணமகனுக்கு அனுமதி மறுப்பு- அதிகாரிகள் விசாரணை

Published On 2019-11-22 04:14 GMT   |   Update On 2019-11-22 04:14 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த வாலிபர், கோவிலில் திருமணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போபால்:

மத்திய பிரதேச மாநிலம், பர்கான்பூர் மாவட்டத்தில் உள்ளது பிரோடா கிராமம். இங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த தலித் மணமகன் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். 

அப்போது கோவிலில் உள்ளவர்கள், தலித் குடும்பத்தினரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் தங்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என மணமகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலித் குடும்பத்தினரை கோவிலுக்குள் அனுமதிக்காதது தொடர்பான புகாரை தீவிரமாக விசாரித்து வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணைக்கோட்ட அதிகாரி காசிராம் படோல் தெரிவித்துள்ளார்.

புகார் அளித்த தலித் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று லால்பாக் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News