செய்திகள்
கோப்பு படம்

பெங்களுரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 60 பேர் கைது

Published On 2019-10-26 12:14 GMT   |   Update On 2019-10-26 15:49 GMT
அனுமதியின்றி அதிக நாட்கள் தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 60 பேரை பெங்களுர் போலிசார் இன்று கைது செய்யதுள்ளனர்.
பெங்களுர்:

இந்தியாவில் பிறநாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறிவரும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக, அண்டைநாடான வங்காளதேசத்தில் இருந்து அசாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களின் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் மக்கள் விசா உள்பட உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி குடியேறி வருகின்றனர். 

அவ்வாறு சட்டவிரோதமாக நுழைந்தவர்களை கண்டுபிடிக்க அசாம் போன்ற மாநிலங்களில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடைபெற்றுவருகிறது. 

இந்த நடவடிக்கைகளால் எல்லையோர மாநிலங்களில் குடியேறிவந்த அண்டை நாடுகளை சேர்ந்தவர்கள் தற்போது  தென்மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோதமாக நுழைந்த வண்ணம் உள்ளனர்.



இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களுரில் தங்களது விசாவுக்கான காலம் காலாவதியாகியும் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 60 பேரை பெங்களுர் நகர குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 31 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போலீஸ் இணை ஆணையர் சந்தீப் படில், 'பெங்களுரில் வசித்து வரும் வங்காளதேசத்தினர் நகரில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருவதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனையில் சட்டவிரோதமாக குடியேறியிருந்த வங்காளதேசத்தினர்  60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற சோதனை நகரின் அனைத்து பகுதிகளும் தொடர்ந்து நடைபெறும்’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News