செய்திகள்
பதவியேற்ற புதிய நீதிபதிகள்

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு - இன்று 4 பேர் பதவியேற்றனர்

Published On 2019-09-23 11:17 GMT   |   Update On 2019-09-23 12:36 GMT
சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 4 பேர் இன்று பதவியேற்றதால் நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 34 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 60 ஆயிரம் வழக்குகள் தேங்கி கிடப்பதால் இவற்றை விரைவாக விசாரித்து முடிக்கும் வகையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் மோடிக்கு பரிந்துரைத்தார்.

இதைதொடர்ந்து, நீதிபதிகளின் எண்ணிக்கையை முப்பதில் இருந்து முப்பத்துநான்காக அதிகரிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இந்த புதிய பதவிகளுக்கான பெயர்களை சமீபத்தில் ‘கொலீஜியம்’ பரிந்துரைத்தது.



பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி, ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ரவிந்திர பட், இமாச்சலப்பிரதேசம் ஐகோர்ட் தலைமை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், கேரளா ஐகோர்ட் ரிஷிகேஷ் ராய் ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, எஸ்.ரவிந்திர பட், வி.ராமசுப்பிரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இவர்கள் நால்வருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே 30 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 34 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News