செய்திகள்
இரவு முழுவதும் பள்ளிக்குள் தவித்த மாணவர்கள்

ராஜஸ்தான்: வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்ததால் விடியவிடிய பள்ளிக்குள் தவித்த 350 மாணவர்கள்

Published On 2019-09-15 08:25 GMT   |   Update On 2019-09-15 09:50 GMT
ராஜஸ்தான் மாநிலம், சிட்டோகர் மாவட்டத்தில் அணைக்கட்டில் இருந்து திறக்கப்பட்ட நீர் சாலை வழியாக பெருவெள்ளமாக பாய்ந்தோடியதால் 350 மாணவர்கள் விடியவிடிய பள்ளிக்குள் சிக்கித் தவித்தனர்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தின் பல மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அவ்வகையில், சிட்டோகர் மாவட்டத்தில் பெய்த பெருமழையின் விளைவாக ஏரிகள், அணைக்கட்டுகள் ஆகியவற்றில் கொள்ளளவை கடந்து தண்ணீர் வெள்ளமாக  கரைபுரண்டு ஓடுகிறது.



இந்நிலையில், இம்மாவட்டத்தில் உள்ள ராணா பிரதாப் அணையில் இருந்து உபரி மழைநீர் நேற்று திறந்து விடப்பட்டது. அந்த உபரிநீர் முக்கிய சாலைகள் வழியாக  பெருவெள்ளமாக பாய்ந்தோடியதால் அருகாமையில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்கள் என சுமார் 400 பேர் சாலையை கடந்து வீட்டுக்கு செல்ல முடியாமல் விடியவிடிய பள்ளிக்குள் சிக்கித் தவித்தனர்.



அவர்கள் அனைவருக்கும் அந்த பள்ளி அமைந்திருக்கும் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து உணவு வகைகளை சமைத்து, பரிமாறினர்.
Tags:    

Similar News