செய்திகள்
மகளுடன் சுல்தான்கான்

மகளை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு விரைந்த தாய் -காரணம்?

Published On 2019-07-10 09:35 GMT   |   Update On 2019-07-10 09:35 GMT
மகாராஷ்டிராவில் மகளை கடித்த பாம்புடன், மகளையும் கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு தாய் சென்றுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
மும்பை:

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழைப் பெய்து வருகிறது. இந்த மழைக்கு 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் பல்வேறு உடல் உபாதைகளால் அவதிக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மும்பை நகரமே இந்த கனமழையின் விளைவுகளால் நிலை தடுமாறியது. மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள் மேலும் கனமழை பிடித்துவிடுமோ எனும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையால் மேலும் ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையின் தாராவியில் உள்ள பால்கிபூர் பகுதியில் வசிப்பவர் சுல்தான்கான். இவர் குடும்பத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகளை ஏதோ கடித்துள்ளது. சுல்தானிடம் அவர் கூறவே, பூச்சாக இருக்கும் என கூறியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து பாம்பு ஒன்று அவருக்கு அருகில் ஓடியுள்ளது. பின்னர்தான் தெரிந்தது கடித்தது பாம்பு என்று. உடனடியாக சற்றும் யோசிக்காமல் அந்த பாம்பைப் பிடித்தார் சுல்தான்கான். பின்னர் மகளுடனும், பிடித்த பாம்புடனும் மருத்துவமனைக்கு விரைந்தார்.



இது குறித்து சுல்தான்கான் கூறுகையில், ‘கனமழை காரணமாக எங்கள் பகுதி எங்கும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. எங்கள் வீட்டின் அருகே பூங்கா ஒன்று உள்ளது. இதனால் எலி, பாம்பு, கொசு மற்றும் பல பூச்சிகளால் அடிக்கடி தொல்லை ஏற்படுகிறது.

எனது மகளை கடித்த பாம்பை பிடித்து எடுத்து வரக் காரணம், கடித்த பாம்பு எந்த வகை என தெரிந்தால் தகுந்த சிகிச்சை அளிப்பது மருத்துவருக்கு சுலபமாகிவிடும் என்பதால்தான். வேறு எதையும் யோசிக்கவில்லை’ என கூறினார். 

தன் உயிரைப் பற்றி கவலை இன்றி, மகளுக்காக இப்படி ஒரு செயலை செய்த சுல்தானை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 
Tags:    

Similar News