செய்திகள்
அரசியலில் சமூக வலைத்தளங்கள்(மாதிரிப்படம்)

சமூக வலைத்தளங்களை மட்டுமே நம்பி அரசியல் செய்ய அவசியமில்லை-ஆய்வு முடிவு

Published On 2019-07-05 06:04 GMT   |   Update On 2019-07-05 07:13 GMT
சமூக வலைத்தளங்களை மட்டுமே நம்பி அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை என ஆய்வின் முடிவு ஒன்று கூறியுள்ளது.
புது டெல்லி:

இளைஞர்கள் மட்டுமின்றி சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருமே இன்று சமூக வலைத்தளங்களோடு ஒன்றிவிட்டனர். அனைவருமே ஆண்டிராய்டு போன்களை விடுத்து இருக்க கூட விரும்பவதில்லை.

இந்த சமூக வலைத்தளங்களால்தான் அமெரிக்காவில் ஆட்சி மாற்றமே உண்டானது என இன்றளவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.  அரசியல் பேச்சு, தேர்தல் பிரசாரம், விளம்பரங்கள் என அனைத்துமே சமூக வலைத்தளங்களில் இடம்பெற்று மாபெரும் சந்தையாகவே மாறி உள்ளது.



சிறிய அமைப்புகள் தொடங்கி பெரிய அரசியல் கட்சிகள் வரை சமூக வலைத்தளங்களையே பெரும்பாலும் நம்பி களம் இறங்குவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்களுக்கு ரூ.53 கோடி செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களுக்கு அரசியல் கட்சிகள் இவ்வளவு செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை என ஆய்வு ஒன்றில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வாக்காளர்களில் 64% பேர் சரியாக இணையத்தை பயன்படுத்தாதவர்கள் அல்லது முற்றிலும் பயன்படுத்தாதவர்களாக இருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

இணையத்தோடு ஒன்றி இருப்பவர்கள்கூட பொழுதுபோக்கிற்கே முக்கியத்துவம் கொடுப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றின என்றும் அனைத்து கட்சியினராலும் கூறப்பட்டு வந்தது.

இந்த ஆய்வின் முடிவில், ‘எந்த தேர்தலாக இருந்தாலும் அதற்கு களம் தான் முக்கியமே தவிர, சமூக வலைத்தளம் அல்ல. பதிவுகளும் ,பகிர்வுகளும் மட்டுமே ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியை தீர்மானித்து விட முடியாது.

இந்திய அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்களை மட்டுமே நம்பி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் ஏதுமில்லை’ என தெரிய வந்துள்ளது.










Tags:    

Similar News