செய்திகள்

வடமாநிலங்களில் புயல் மழைக்கு பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்-பிரதமர் அறிவிப்பு

Published On 2019-04-17 09:31 GMT   |   Update On 2019-04-17 09:31 GMT
ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் புயல் மழை பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். #RainStrom #PMModi
புது டெல்லி:

ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன. இந்த புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

இதேபோல் மத்தியபிரதேசம், குஜராத் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த புயல் மழைக்கு 19  பேர் பலியாகினர்.



புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டோருக்கு நாங்கள் துணை நிற்போம். மத்திய அரசு அனைத்து உதவிகளையும், ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்துவருவதுடன் கண்காணித்தும் வருகிறது.

இந்த புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலும் இந்த புயல் மழையால் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்" என மோடி கூறியுள்ளார். #RainStrom #PMModi  

Tags:    

Similar News