செய்திகள்

லக்னோவில் காஷ்மீர் வாலிபர்கள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல்

Published On 2019-03-07 11:22 GMT   |   Update On 2019-03-07 11:22 GMT
லக்னோவில் காஷ்மீர் வாலிபர்கள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Kashmiri
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்ய நாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காஷ்மீரை சேர்ந்த 2 வாலிபர்களை இந்துத்துவா அமைப்பினர் கடுமையாக தாக்கி உள்ளனர்.

லக்னோவில் பரபரப்பான சாலையில் இருவரும் உலர்ந்த திராட்சை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது காவி உடையில் கையில் தடியுடன் வந்த 2 பேர் காஷ்மீர் வாலிபர்களை கடுமையாக தாக்கி உள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவ வீடியோ வைரலாக பரவி வருகிறது. புல்வாமா சம்பவத்துக்கு பிறகு காஷ்மீரை சேர்ந்தவர்கள் மீண்டும் தாக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். காஷ்மீர் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். #Kashmiri
Tags:    

Similar News