செய்திகள்

சோனியா காந்திக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

Published On 2018-12-09 04:55 GMT   |   Update On 2018-12-09 04:55 GMT
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #SoniaGandhi #Modi
புதுடெல்லி:

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள். 73-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கும் அவருக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாரத பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் சோனியாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மோடி தனது டுவிட்டரில் ‘‘திருமதி சோனியா காந்திஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட காலம், ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News