செய்திகள் (Tamil News)

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் - ராகுல்காந்தி 2 நாள் பிரசாரம்

Published On 2018-10-20 06:55 GMT   |   Update On 2018-10-20 06:55 GMT
சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் ராஜஸ்தானில் பிரசாரம் செய்கிறார். #RajasthanAssemblyElection #RahulGandhi

ஜெய்ப்பூர்:

பா.ஜனதா ஆட்சி நடை பெறும் ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வருகிற டிசம்பர் மாதம் 7-ந்தேதி தேர்தல் நடை பெறுகிறது. ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே அங்கு முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டார். அடுத்த கட்டமாக வருகிற 24-ந்தேதி மீண்டும் ராஜஸ்தான் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

2 நாட்கள் அவர் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். ஜாலாவார் என்ற இடத்தில் பிரமாண்ட பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொண்டு பேசுகிறார். தொடர்ந்து ‘ரோடு ஷோ’ செல்லும் ராகுல்காந்தி கோதா என்ற இடத்தில் திறந்த ஜீப்பில் சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.


மறுநாள் (25-ந்தேதி) சிகார் என்ற இடத்தில் பொதுமக்களை சந்திக்கிறார். அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ராகுல் காந்தி கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து 4-வது முறையாக ராஜஸ்தான் வருகிறார். இந்த மாதத்தில் மட்டும் 2-வது முறையாக வருவது குறிப்பிடத்தக்கது.

ராகுல்காந்தி பிரசாரம் செய்யும் கோதா மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளும், ஜாலாவார் மாவட்டத்தில் 4 தொகுதிகளும் அடங்கியுள்ளன.

சிகார் மாவட்டத்தில் ராகுல்காந்தி கடந்த 5-ந்தேதி பிரசாரம் செய்தார். 25-ந் தேதி அவர் மீண்டும் பிரசாரம் செய்கிறார். #RajasthanAssemblyElection #RahulGandhi

Tags:    

Similar News