செய்திகள்
கோப்புப்படம்

இந்தியா அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி: உத்தரகாண்டில் 16-ம் தேதி துவக்கம்

Published On 2018-09-10 10:21 GMT   |   Update On 2018-09-10 10:21 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 16-ம் தேதி முதல் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற உள்ளது. #IndoUSMilitaryExercise #DefenceCooperation
லக்னோ:

இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்கள் பங்கேற்கும் போர் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஊடுருவல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. அவ்வகையில் 14-வது கூட்டு ராணுவ பயிற்சி வரும் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

யூத் அப்யாஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பயிற்சியானது இந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் சாவ்பாட்டியாவில் உள்ள இமயமலை அடிவாரத்தில் நடைபெற உள்ளது. இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் அமெரிக்காவில் இருந்து 350 ராணுவ வீரர்களும், இந்தியா தரப்பில் அதே அளவிலான வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.


இருநாட்டு ராணுவத்திலும் உள்ள நிர்வாக கட்டமைப்பு, ஆயுதங்கள், உபகரணங்கள், நம்பிக்கையூட்டும் பயிற்சி மற்றும் போர் ஒத்திகை உள்ளிட்டவை குறித்து பரஸ்பரம் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. #IndoUSMilitaryExercise #DefenceCooperation 
Tags:    

Similar News