செய்திகள்

கொல்கத்தா- இடிந்து விழுந்த மேம்பாலத்தை பார்வையிட்டார் முதல் மந்திரி மம்தா பானர்ஜி

Published On 2018-09-05 14:20 GMT   |   Update On 2018-09-05 14:20 GMT
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று இடிந்து விழுந்த மேஜர்ஹட் மேம்பாலத்தை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று பார்வையிட்டார். #KolkataBridgeCollapse #MamataBanerjee
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் மேஜர்ஹட் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மேம்பாலத்துக்கு கீழே சென்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின. இந்த விபத்தில் ஒருவர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி இடிந்து விழுந்த மேஜர்ஹட் மேம்பாலத்தை இன்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அரசு வேலையும் வழங்கப்படும். இன்று மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்தார். 

இந்த மேம்பால விபத்துக்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #KolkataBridgeCollapse #MamataBanerjee
Tags:    

Similar News