செய்திகள்

டெல்லியில் நாளை பிரதமர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநில முதல் மந்திரிகள் கூட்டம்

Published On 2018-08-27 13:33 GMT   |   Update On 2018-08-27 13:33 GMT
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநில முதல் மந்திரிகள் கூட்டம் நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. #BJPruledstates #BJPChiefMinisters
புதுடெல்லி:

அருணாச்சலப்பிரதேசம், அசாம், சத்திஸ்கர், கோவா, குஜராத், அரியானா, இமாச்சாலப்பிரதேசம், ஜார்கண்ட், காஷ்மீர், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா. மணிப்பூர். ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

மேலும் பீகார், மேகாலயா, நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வின் ஆதரவுடன் பிறகட்சிகளை சேர்ந்தவர்கள் முதல் மந்திரிகளாக உள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களை சேர்ந்த முதல் மந்திரிகள் கூட்டம்  நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #BJPruledstates #BJPChiefMinisters  
Tags:    

Similar News