செய்திகள்

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களினால் உலகளவில் இந்திய பிராண்ட்கள் பிரபலமடைந்துள்ளன - மோடி

Published On 2018-08-11 11:12 GMT   |   Update On 2018-08-11 11:12 GMT
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களினால்(ஐஐடி) உலகளவில் இந்திய பிராண்ட்கள் பிரபலமடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். #IIT #PMModi
பம்பாய் :

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள, பம்பாய் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

கண்டுபிடிப்புகள் தான் 21-ம் நூற்றாண்டின்  மந்திர சொல்லாக உள்ளது, கண்டுபிடிப்புகள் இல்லாத சமூகம் தேக்கமடைந்துவிடும். 

உலகளவில் இந்திய பிராண்ட்கள் பிரபலமடைய ஐஐடிக்கள் உதவியாக இருந்துள்ளன. இதனால், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மனிதசக்தியாக இந்தியா உருவாகியுள்ளது.

மேலும், உலகளவில் தொழில் தொடங்குவதற்கான மையமாக இந்தியா திகழ்கிறது. எனவே, தொழில்சாலைகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் கவர்சிகரமான இலக்காக இந்தியாவை உருவாக்க வேண்டும்.

இது அரசாங்கத்தின் முயற்சியால் மட்டுமே நடந்துவிடாது, மாணவர்களான உங்களால் தான் இதை நடத்திக்காட்ட முடியும். 

புதிய யோசனைகள் அனைத்தும் கல்லூரி வளாகங்களில் இருந்தே வெளி வருகின்றன, மாறாக அரசு அலுவலகங்களிளோ அல்லது கண்கவர் கட்டிடங்களில் இருந்தோ அவை வெளிவருவது இல்லை. மேலும், பம்பாய் ஐஐடி-க்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  #IIT #PMModi
Tags:    

Similar News