செய்திகள்

ஆந்திரா கல்குவாரி வெடிவிபத்து - தொழிலாளர்கள் 10 பேர் பலி

Published On 2018-08-03 18:59 GMT   |   Update On 2018-08-03 19:00 GMT
ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்னூல் :

ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வரும் இந்த குவாரியில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. 

இதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கல்குவாரி வெடிவிபத்தினால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

அதிக அளவிலான டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தியதே வெடி விபத்திற்கு காரணம் எனவும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News