செய்திகள்

1024 எம்,பி, எம்.எல்.ஏ.க்கள்மீது கடும் குற்ற வழக்குகள் - இவர்கள்தான் நமது மக்கள் பிரதிநிதிகள்

Published On 2018-08-03 09:43 GMT   |   Update On 2018-08-03 09:43 GMT
இந்தியாவில் மொத்தமுள்ள 4,856 எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களில் 1024 பேர் மீது கடும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #IndianParliamentarians #Indian Legislators
புதுடெல்லி:

இந்தியாவில் மொத்தமுள்ள 770 எம்.பி.க்கள் மற்றும் 4086 எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார் தொடர்பாக தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகள் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. 

இந்த ஆய்வின் முடிவில் சுமார் 1024 பேர் மீது கடும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் 64 பேர் மீது கடத்தல் தொடர்பாக வழக்குகள் பதிவாகியுள்ளது. 

இதில், அதிகபட்சமாக பாஜகவை சேர்ந்த 16 பேர் மீது வழக்குக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த 6 பேரும் அடங்குவர்.



மேலும், கடத்தல், குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைத்தல்,  ஆள் கடத்தி கொல்லுதல், பெண்களை கடத்தி திருமணம் செய்தல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகளிலும் இவர்கள்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் மொத்தமுள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்களில் 21 சதவீதம் பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #IndianParliamentarians #Indian Legislators
Tags:    

Similar News