செய்திகள்

பல்கலைக்கழக ஊழியர்கள் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது - 33 பேர் உயிரிழப்பு

Published On 2018-07-28 09:30 GMT   |   Update On 2018-07-28 10:30 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #MaharashtraAccident #BusFellDown
ராய்காட்:

மகாராஷ்டிர மாநிலம் தபோலியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக ஊழியர்கள், சடாரா மாவட்டத்தில் உள்ள மகாபலேஸ்வர் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் சென்ற பேருந்து, இன்று மதியம் ராய்காட் மாவட்டம் அம்பெனலி காட் மலைப்பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தாக்கில் தலைகீழாக விழுந்தது.

சுமார் 500 அடி ஆழ பள்ளத்தில் விழுந்ததால் பேருந்து முற்றிலும் சிதைந்து போனது. பேருந்தினுள் இருந்தவர்கள் பலர் உடல் உறுப்புகள் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்ததாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். #MaharashtraAccident #BusFellDown
Tags:    

Similar News